உள்நாடுசூடான செய்திகள் 1

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

(UTV | கொழும்பு) –

மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி ஊடாக க.பொ.த. (உ/த) பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு கல்­லூரி நிர்­வாகம் இது­வரை விடுகைச் சான்­றிதழ் (Leaving Certificate) வழங்­கா­மையால் குறிப்­பிட்ட பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்குத் தகுதி பெற்­றுள்ள மாண­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்ளனர்.

பரீட்சை வெட்டுப் புள்­ளி­களின் அடிப்­ப­டையில் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு தெரி­வான மாண­வர்கள் பாட­சா­லையின் விடுகைச் சான்­றி­தழைச் சமர்ப்­பிப்­பது கட்­டா­ய­மாகும். பரீட்சை பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் 8 மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
கல்­லூரி நிர்­வாகம் தமக்கு விடுகைச் சான்­றிதழ் வழங்­காமை தொடர்பில் அவர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரியின் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்று அனுப்பி வைத்­துள்ளார்.

கபூ­ரியா அரபுக் கல்­லூரி மாண­வர்கள் கல்­லூ­ரி­யி­லி­ருந்து விடுகைச் சான்­றிதழ் பெற்றுக் கொள்­வ­தற்கு திணைக்­க­ளத்தின் ஒத்­து­ழைப்பைக் கோரி­யுள்­ளார்கள். அவர்கள் தங்­க­ளது உயர் கல்­வியைத் தொடர்­வ­தற்கு இந்தச் சான்­றிதழ் அவ­சி­ய­மாகும். எனவே, உரிய சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யுங்கள் என கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

திணைக்­களப் பணிப்­பா­ள­ரினால் கடந்த 4ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்டும் இது­வரை அதற்­கு­ரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என மாண­வர்கள் தெரிவிக்கின்றனர்.-

 

பரீல் Vidivelli

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்

காற்றுடன் கூடிய மழை

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…