அரசியல்உள்நாடு

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கைக்கான கனேடியத் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அண்மையில் கனடாவுக்குப் பயணமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அங்கு கனேடியப் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், குறித்த சந்திப்புகள் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் பேசப்பட்ட இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினருக்கும், கனேடியத் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஒழுங்கமைக்குமாறு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன், உயர்ஸ்தானிகரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இலங்கைக்கு செல்ல முடியாது என தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு”

கொவிட் – 19 விஞ்ஞான ரீதியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை

சலுகையை முறைகேடாக நிறுவனம் -அரசாங்கத்திற்கு 35 பில்லியன் நட்டம்