உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – மேலும் மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்களை நீதிமன்ற தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைவாக பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக என்று கொழும்பு குற்றவியல் பிரிவு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (23) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்த துப்பாக்கிதாரியை அழைத்துச் சென்ற சந்தேக நபர்கள் இருவரும், துப்பாக்கியை வழங்கிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.

தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைவாக சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேக நபர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி அளித்து, முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க உத்தரவிட்டார்.

Related posts

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!