உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – மேலும் இருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் டான் ஜனக உதய குமார என்ற நபர் ஆவார், இவர் கடுவெலவிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை கொண்டு சென்ற ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.

மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய காவல்துறையைச் சேர்ந்த ஹசித ரோஷன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்கள் இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor

ஆர்.சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்