உள்நாடு

கணினி அமைப்பில் கோளாறு – உர மானியம் தாமதத்திற்கான காரணம்

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய அமைச்சு, இது தொடர்பான அறிக்கையை இன்று (19) விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், குறித்த பணம் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் நேற்று ஊடங்களுக்கு தெரிவித்திருந்தனர்

Related posts

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

editor

வைத்தியசாலையில் சிறுவருக்கான இருதய சிகிச்சைகள் நிறுத்தம் – தினேஷ் யாப்பா.