உள்நாடு

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்ட மாணவன் முதலிடம்!

(UTV | கொழும்பு) –

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம். 2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாயான நிலையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் வண்ணாகுளத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். பாடசாலையில் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பண்புள்ள மாணவனாக கல்வி கற்று பாடசாலைக்கும் மடு கல்வி வலயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார். மேலும் அவரது உயர்வுக்கு பெற்றோர்களின் ஊக்கப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

editor

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்