உள்நாடு

கணவனால் தாக்கப்பட்டு வரும் பெண்கள் வைத்தியர்களிடம் கணவனை காட்டிக்கொடுப்பதில்லை

(UTV | கொழும்பு) –  கணவனால் தாக்கப்பட்டு வரும் பெண்கள் வைத்தியர்களிடம் கணவனை காட்டிக்கொடுப்பதில்லை- டொக்டர் லக்ஷ்மன் சேனாநாயக்க

கணவன்மக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெண்கள் மருத்துவர்களிடம் உண்மையை கூறுவதில்லை என காச்சல் மகளிர் வைத்திய சாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் டொக்டர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலைகளுக்கு வரும் பெண்களில் 50% இதற்கும் அதிகமானோர் கணவனால் தாக்கப்பட்டதாக குறிப்பிட விரும்புவதில்லை. காயங்களுடன் வைத்தியசாலைக்கு வரும் பெண்கள் கீழே விழுந்து காயமடைந்ததாக பொய் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கர்ப்பிணித் தாய்மார்களும் அதீத குடும்ப வன்முறைகளை எதிர்கொள்வதாகவும், இத்தகைய வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகும் கர்ப்பிணிப் பெண்கள் கருச்சிதைவு, குறைந்த எடை மற்றும் இரத்தப்போக்கு போன்ற அபாயங்களை எதிர்கொள்வதாகவும், மேலும் இதுபோன்ற தாக்குதல்களால் மனநலம் பாதிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் இருப்பதாகவும் மருத்துவர்தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்ப்பதில் ஊடகங்களின் பங்கு” என்ற தலைப்பில் அண்மையில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

 

Related posts

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தவறாக வழிநடாத்தும் சுமந்திரன்: விக்னேஸ்வரன்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சந்தேக நபர்களுக்கு பிடியாணை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு