உள்நாடு

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை நோக்கி இன்று சனிக்கிழமை (09) அதிகாலை பயணிக்கவிருந்த விமானம் ஒன்று தொழினுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் 604 என்ற விமானமே இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, விமானத்திலிருந்த சில பயணிகளை வேறொரு விமானத்தின் ஊடாக மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

எஞ்சிய பயணிகளை நாளை ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 12.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்