சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்சமயம் நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய இந்த கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற பார்வை கூடம் பொது மக்கள் மற்றும் விருந்தினருக்காவும் திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற பார்வை கூடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் எந்தவொரு விருந்தினருக்கும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை

தெஹிவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு