வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்..!

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் பொருட்டே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கட்சி தலைவர்கள் ஒன்று கூடவுள்ளனர்.

இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், தவிசாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல்

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பலத்த காற்று! – அவதான எச்சரிக்கை!

அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மர்மமான முறையில் மரணம்