சூடான செய்திகள் 1

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்

(UTV NEWS) – அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடமபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் குறித்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

குற்றங்களுடன் சமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்