சூடான செய்திகள் 1

கடும் வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண வெப்பநிலையை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதுடன், வவுனியா, அநுராதபுரம், கட்டுகஸ்தொட்டை, மஹா இலுப்பள்ளம ஆகிய பகுதிகளில் பகல் வேளையில் சாதாரண வெப்பநிலையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அநுராதபுரம், கொழும்பு, இரத்மலானை பகுதிகளில் இரவு வேளைகளில் 2 பாகை செல்சியசினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று