உள்நாடு

கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சகல மாகாணங்களிலும் வழமை போன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்

தொழில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் தொடருந்து சேவைகள் இடம்பெறமாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகளின் நலன்கருதி மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை

கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்