சூடான செய்திகள் 1

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அளவில் கடுமையான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் அளவில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்”-அமைச்சர் ரிஷாட்!

உலக நீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் பவுசர்கள் விநியோகம்

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து