உள்நாடு

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

(UTV | கொழும்பு) – இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் மொத்த வருமானமானது, கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப் பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

editor