உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 557 தொற்றாளர்கள் : மூவர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பம்பலப்பிட்டியைச் சேர்ந்த ஆண்ஒருவரும் பேலியகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மரணித்த இவர்கள் அனைவரும் 87,80,73 வயதையுடையவர்களென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 553 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,028 ஆக உயர்ந்துள்ளதுடன், தற்போது, 6,113 பேர் வைத்தியசாலையில் உள்ளனர்.

இதுவரை 15,816 பேர் குணமடைந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது குழந்தை மரணம் – ஏறாவூரில் சோகம் | வீடியோ

editor

ஈஸ்டர் தாக்குதலின் போது தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைகள் நீக்கம்?