உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட எந்தவொரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான 482 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏலவே 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்