உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 942 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை கொரோனா கொத்தணியிடன் தொடர்புடைய 939 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூவரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 567 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,211 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6,526 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் நான்கு உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP எம்.பி யின் வாகனம்

editor

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை