உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக இந்நாட்டிற்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 752,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் மேலும் 5 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு