உள்நாடு

கடதாசி தட்டுப்பாடு : பரீட்சைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளில் இறுதித் தவணை பரீட்சைகள் பிற்போடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடதாசி மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

கைப்பேசிகளை பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ள கோரிக்கை