சூடான செய்திகள் 1

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேரும் மீண்டும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்றைய தினம் காலி நீதவான் ஹா்சன கெக்குனுவல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கைத்தொலைப்பேசிகள் இரண்டு மற்றும் அவற்றுக்கு மின்னேற்றும் கருவிகள் இரண்டையும் வழங்க முயற்சித்த நிலையில் சந்தேகத்துக்குயரிவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ரயன் வென் றுயன் பிணையில் விடுதலை

சதொஸ சந்தையில் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அமைப்பு

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!