வகைப்படுத்தப்படாத

கஞ்சா விற்பனை செய்ய கனடா அனுமதி

(UTV|CANADA)-கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் ஏற்கனவே அனுமதியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதேபோல், ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால், கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம்.

புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சாவும் கிடைக்கும்.

மதுபானசாலைகளில் கஞ்சாவை உரிய அனுமதியுடன் பயன்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.

போதைப் பொருட்களில் முக்கியமானதாக கஞ்சா கருதப்படுகிறது.

மருத்துவப் பயன்பாடுகளுக்காக தொடங்கப்பட்ட கஞ்சா, நாளடைவில் அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது.

அதன் ஆபத்தை அறிந்து, சில நாடுகள் அதற்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலர் பலி

அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ