அரசியல்உள்நாடு

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் – சந்தேக நபர் பர பரப்பான வாக்குமூலம்.

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு

editor