விளையாட்டு

ஓஷத பெர்னாண்டோவுக்கு ஓய்வு

(UTV | கொழும்பு) –  லங்கா பிரீமியர் லீக் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் ஓஷத பெர்னாண்டோ விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகியுள்ளதனால் போட்டிகளில் கலந்துகொள்ளாது ஒரு வாரம் ஓய்விலிருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்றுமுன்தினம்(28) கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஓஷத பெர்னாண்டா துடுப்பெடுத்தாடி வரும் வேளையில் உபாதைக்குள்ளானர்.

ஓஷத பெர்னாண்டோவின் பரிசோதனை அறிக்கையில் கணுக்காலை சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

BPLக்கு 7 அணிகள்

மேலும் இரு வீரர்களுக்கு கொவிட் தொற்று