கிசு கிசு

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒப்புதல்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்குவடார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிகம் கொண்ட இங்கு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது.

அந்த நிலையில் 2 ஆண் ஓரின சேர்க்கை ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக முடிவு எடுக்க 9 நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறப்பு அமர்வு ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கி தீர்ப்பு அளித்தது. 9 நீதிபதிகளில் 5 பேர் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு குறித்து, ஓரின சேர்க்கையாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘‘இந்த தீர்ப்பு மூலம் ஈக்குவடார் சமத்துவ நாடு என்பது நிரூபணமாகி இருக்கிறது’’ என்றார்.

 

 

Image:

 

 

Related posts

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

அவுஸ்திரேலியாவின் வெற்றி கனவை பறித்த பென் ஸ்டோக்ஸ்

முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்- நாமல் குமார?