விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா அறிவித்துள்ளார்.

WWE மல்யுத்த போட்டிகளிலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜோன்சீனா.

இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

16 முறை WWE செம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோன்சீனா, WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற ‘மணி இன் தி பேங்க்’ (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜோன்சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையை வீழ்த்தியது ஆஸி

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான பாடலில் சங்கக்கார…