விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்குமாறு அமெரிக்க அதிபர் கோரிக்கை

(UTV|அமெரிக்கா ) – ஒலிம்பிக் போட்டியை ஒருவருடம் ஒத்திவைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யோசனை கூறியுள்ளார்.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் தாகம் அதிகரித்து இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்துவதுவதற்கு போட்டி அமைப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

ஜப்பானில் டோக்கியோவில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓர் ஆண்டுக்கு ஒத்தி வைக்கலாம். ஒலிம்பிக் நடத்தப்பட்டால் மேலும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் நடந்தால் யாரும் மைதானத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு