உள்நாடு

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்று(17) மாத்திரம் 2,723 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக இதுவரை 135,519 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

போதை பொருட்களுடன் 04 பேர் கைது