உலகம்

ஒரு வாரத்துக்கு ஆப்கானிஸ்தான் எல்லையை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானம் 

(UTV|பாகிஸ்தான்) – ஈரானில் இருந்து வருபவர்களை தவிர்க்கும் வகையில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாக பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஈரானுக்கு யாத்திரை செய்யச்சென்று சமீபத்தில் தாய்நாடு திரும்பிய சுமார் 8 ஆயிரம் பேரிடம் நடத்திய பரிசோதனையில் சுமார் 200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பாகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் எதிரொலியாக ஈரான் நாட்டின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானுக்கு உட்பட்ட கராச்சி மற்றும் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியுடன் பயணிக்க முடியாது : பிரதமர் இராஜினாமா

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

மீண்டும் ஏவுகணைகளை வீசியது வட கொரியா