கிசு கிசு

ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த லசித் மலிங்க

(UTV|COLOMBO) – இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் ‘The King Of Yorker’ என அழைக்கப்படும் லசித் மலிங்க இந்தியாவுடன் நேற்று இடம்பெற்ற போட்டியுடன் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும், இன்னும் ஓர் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதுவரை மொத்தமாக 4 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய லசித் மலிங்க,
மொத்தமாக 29 போட்டிகளை எதிர்கொண்டு 56 விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இரண்டு தடவை ஹெட்ரிக் சாதனையை படைத்துள்ளதுடன், 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லசித் மலிங்க.

Related posts

காதலர் தினத்தையொட்டி ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?

வங்கிகளில் கணக்குளை வைத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்…