சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிரணியின் அதிரடி தீர்மானம்

(UTV|COLOMBO)-ஜே வி பி முன்வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக செயற்பட, ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது உள்ளிட்ட சரத்துகள் அடங்கிய இந்த சட்டமூலத்தை, ஜே வி பி கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்தது.

இது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராய்ந்த ஒன்றிணைந்த எதிரணி, அதற்கு எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயர் பதவிக்கு ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில் ஒருவரை பரிந்துரைக்கவும் அதுதொடர்பில் சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாற்று அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை வானிலை சீரடைந்தப் பின்னர் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும்