உலகம்

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ்

(UTV |  நியூயார்க்) – ஐ.நா.வின் பொதுச்செயலாளராக இருந்து வரும் ஆன்டனியோ குட்டரெஸ் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது.

ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு 1-ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெசே தேர்வாகிறார்.

வரும் 18-ம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படுவார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை தொடரும்.

Related posts

உக்ரைனுக்கு ஆதரவாகும் இத்தாலி

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!

பிரேசில் உட்பட 12 நாடுகளுக்கு பயண தடை