சூடான செய்திகள் 1

ஐ.தே.முன்னணியின் அமைச்சர்கள் சிலர் ராஜிதவின் வீட்டில் ஒன்றுகூடல்

(UTVNEWS|COLOMBO) -ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் குழுவின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரிவிக்கிறனர்.

இந்த கலந்துரையாடலில் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அரசாங்கத்துடன் உள்ள கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளாக அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு