சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டிய, கொலன்னாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 109 கிராம் 306 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 807 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்