சூடான செய்திகள் 1

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலர் கொலை

(UTVNEWS|COLOMBO) -ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஐஸ்கிரீம் வாங்கி உண்ண வேண்டும் என காதலி கேட்டார்.

ஆனால் காதலரோ “நீ ஏற்கெனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி வாங்க மறுத்து விட்டார். ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் எடை குறித்து கேலி செய்ததால் காதலி ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்து சென்றார்.

பின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு, அங்குள்ள கடைக்குச்சென்று 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்தார். காதலர் “எதற்காக கத்தரிக்கோல்?” என கேட்ட அடுத்த நொடியே அவரது வயிற்றில் 4 முறை குத்தினார்.

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற காதலியை பொலிஸார் மடக்கி பிடித்து கைதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம்

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை