வணிகம்

ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் இரத்துச் செய்யப்படமாட்டா – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(UDHAYAM, COLOMBO) – தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை எவ்விதத்திலும் ரத்துச் செய்யப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்றுமதியை இலக்காக கொண்ட உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது நோக்கமாகும் என்றும் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிசலுகை கிடைக்கப் பெற்றதும் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்றும் கூறினார்.

Related posts

இலங்கையில் எமிரேட்ஸ் விமான சேவைகள் அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது