விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்- டெல்லி கெப்பிட்டல்ஸ் 37 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ஓட்டங்களினால் வெற்றிகொண்டது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதேவேளை, இன்றைய தினம் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி, இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

இலங்கையின் லங்கா பிறீமியர் லீக் தொடரில் – பி-லவ் கண்டி சம்பியனானது.

பாகிஸ்தான் அணியில் வாஸிமிற்கு பதிலாக ஹசன் அலி

மிக்கி ஆர்தர் இராஜினாமா