விளையாட்டு

ஐபிஎல் : இம்முறையும் சி.எஸ்.கே அணி சொதப்புமாம்

(UTV | சென்னை) – சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் கணிப்பை முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் எதிர்வரும் 09ம் திகதி சென்னையில் தொடங்கவுள்ளது. இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு ஐபிஎல் குறித்து கணித்துள்ளார். அதன்படி தோனியின் சி.எஸ்.கே அணி இந்த முறையும் கடைசி இடத்தை பிடித்து சொதப்பும் என கூறியுள்ளார். அதே வேளையில் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்றும் டெல்லி அணி 2ம் இடம்பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணியில் வீரர்கள் தேர்வு சிறப்பாக உள்ளதால் இந்த முறை 3வது இடம் பிடிக்கும் எனவும் ஐதராபாத் அணி 4வது இடத்தை பிடிக்கும் எனவும் ஸ்காட் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணி 5வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 6வது இடத்தையும் கொல்கத்தா 7வது இடத்தையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் ‘சாம்பியன்’

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்