அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நவீன் திசாநாயக்க முன்னர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் பதவியையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

விஜேதாச ராஜபக்ஷவிற்கு 500 மில்லியன் ரூபா நட்டயீட்டை வழங்குமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு உத்தரவு