அரசியல்உள்நாடு

ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – சாணக்கியன் எம்.பி

இன்றைய தினம் (10) கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும்.

பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இவ் தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இன்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இவ் குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் நானும் பங்கு பற்றி இருந்தேன்.

Related posts

இருமடங்காக உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்களின் விலைகள்

editor

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

வவுனியாவில் கோர விபத்து!