அரசியல்உள்நாடு

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி – அமைச்சர் விஜித ஹேரத்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

Related posts

சர்வகட்சி இடைக்கால அரசுக்கு சாதகமான பதில்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்