வகைப்படுத்தப்படாத

ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை

(UTV|COLOMBO)-தமது தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அசாதாரண காரணங்களால் இந்தியாவின் அண்டைய நாடுகளில் இருந்து ஏதிலிகள் பெருவாரியாக இந்தியாவில் தஞ்சம் கோருகின்றனர்.
இவ்வாறான ஏதிலிகளை அச்சுறுத்தல் நிறைந்த அவர்களின் சொந்த தேசங்களுக்கு மீண்டும் அனுப்பாதிருக்கும் கொள்கையை இந்தியா இதுவரையில் பின்பற்றி வருகிறது.
ஆனால் ஏலவே இந்தியாவின் சனத்தை உச்சமாக உள்ள நிலையில், ஏனைய நாடுகளின் ஏதிலிகளையும் எத்தனை நாட்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

யாழில் பஸ் மோதியதில் மாணவன் பலி: பிரதேசத்தில் பதற்றம்

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Taylor Swift traces her life story with NY gig