விளையாட்டு

ஏஞ்சலோ தனது 100வது டெஸ்ட் போட்டியில்..

(UTV | கொழும்பு) – இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 6வது வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார். இன்று தொடங்க உள்ள பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் விளையாடுகிறார்.

ஏஞ்சலோ இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்காக 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

மஹேல ஜெயவர்தன – 149 போட்டிகள்

குமார் சங்கக்கார – 134 போட்டிகள்

முத்தையா முரளிதரன் – 131 போட்டிகள்

சமிந்த வாஸ் – 111 போட்டிகள்

சனத் ஜெயசூர்யா – 110 போட்டிகள்

Related posts

வைட்வோஷ் ஆனது இலங்கை

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்