உள்நாடு

எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் இன்று (10) நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 08.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் 01.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்