சூடான செய்திகள் 1

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய – அளுத்கம வீதியில் அடகொஹொடே போகஹ சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சி.சி.டி.வி காணொளி பதிவு ஊடாகவும் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்