வகைப்படுத்தப்படாத

எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA)  நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்குள்ள எரிவாயு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு அங்கு எரிவாயு கசிந்து தீப்பிடித்தது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்ததுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

 

 

 

Related posts

பிரான்ஸில் பதற்ற நிலை

සරසවි අනධ්‍යන සේවකයින් හෙට වර්ජනයකට සුදානම් වෙයි.

ජාතික සමථ දින සැමරුම අදයි