உள்நாடு

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து – ஐவர் காயம்!

(UTV | கொழும்பு) –

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே நேற்றிரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பௌசரும், நோர்வூட்டிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபம் : மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க பரிந்துரை

மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுர மீறியுள்ளார் – சஜித்

editor

பஸ் வீதி வரைபடங்களை இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய முன்னோடித் திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது