உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் வருடத்திற்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஜனாதிபதி ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசி இணக்கம் காண ரஷ்ய ஜனாதிபதிக்கு தூதரகம் ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கும் ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். மக்கள் எதிர்நோக்கும் சில பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான தீர்வுகளை வழங்கியுள்ளது…”

Related posts

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?