உள்நாடு

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மேலதிக நிறுவனங்கள்

(UTV | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துப்படி, பெட்ரோலிய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கான குழு நேற்று (05) நியமிக்கப்பட்டதாக அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பல நிறுவனங்களுக்கு இலங்கையில் பெட்ரோலிய தொழிற்துறையில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 271 தொற்றாளர்கள்

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு