உள்நாடு

எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை

(UTV|கொழும்பு) – அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் ஆகக் கூடியளவான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், 20 முதல் 30 நாட்களுக்கு அவை போதுமானதாக இருக்கும் என்றும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

அவசியம் ஏற்பட்டால் ஹம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கியை பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

பிரதமர் பதவி விலகியதன் பின் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை